Published : 17 Mar 2025 08:58 PM
Last Updated : 17 Mar 2025 08:58 PM

‘குட் பேட் அக்லி’யின் ‘OG சம்பவம்’ பாடல் ப்ரோமோவுக்கு வரவேற்பு!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘ஓஜி சம்பவம்’ பாடல் செவ்வாய்க்கிழமை மாலை வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு படக்குழு பாடல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து பாடி உள்ளனர். அவர்களோடு ஆறு பேர் கோரஸ் பாடி உள்ளனர். இந்த பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதி உள்ளார்.

‘திரை அரங்கம் செதறணும்… இவன் பேர் முழங்க கலக்கட்டும்’ என இந்த பாடலின் வரிகள் உள்ளனர். ஃபுல் எனர்ஜி உடன் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் பாடி உள்ளனர் என்பது இந்த ப்ரோமோ வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாரின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 10-ம் தேதி இந்தப் படம் திரை அரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு 9-ம் தேதி இரவே ப்ரீமியர் காட்சிகளை படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல். >>வீடியோ லிங்க்…

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x