Published : 17 Mar 2025 08:56 AM
Last Updated : 17 Mar 2025 08:56 AM
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பினார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் பரவியது.
இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் கூறும் போது, “எனது தந்தை நீர்ச்சத்து குறைபாடு காரணமாகப் பலவீனமாக உணர்ந்தார். அதனால் சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டார். அவர் இப்போது நலமாக இருக்கிறார். ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோரின் அக்கறைக்கும் ஆசீர்வாதத்துக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
விசாரித்த முதல்வர்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்ததும் டாக்டர்களை தொடர் புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட் டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!” என்று தெரிவித்துள்ளார்.
சாய்ரா பானு வேண்டுகோள்: இதற்கிடையே சாய்ரா பானு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஊடகங்கள் தன்னை ஏ.ஆ.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதில், “இறைவனின் அருளால், அவர் இப்போது நலமாக இருக்கிறார். நாங்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இன்னும் கணவன் மனைவி தான். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் பிரிந்திருக்கிறோம். தயவுசெய்து முன்னாள் மனைவி என்று சொல்லாதீர்கள்” என்று சாய்ரா பானு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment