Last Updated : 15 Mar, 2025 09:11 PM

Published : 15 Mar 2025 09:11 PM
Last Updated : 15 Mar 2025 09:11 PM

விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஷ்ணு விஷால் நடித்து வரும் படத்துக்கு ‘இரண்டு வானம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ கூட்டணியான ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் புதிய படமொன்றில் இணைந்து பணிபுரிந்து வந்தனர். இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது இப்படத்துக்கு ‘இரண்டு வானம்’ என பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

’இரண்டு வானம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக தினேஷ் கே பாபு, இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். முழுக்க ஃபேண்டஸி பின்னணியில் இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் ராம்குமார். இதன் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Elated to present you all 'IRANDU VAANAM' from your beloved combo of Vishnu Vishal & director Ramkumar after Mundasupatti & Ratsasan.Starring the talented & the sensational Mamitha Baiju

A Dhibu Ninan Thomas Musical @TheVishnuVishal @_mamithabaiju @dir_ramkumar… pic.twitter.com/GN4X4SJz1r
— Sathya Jyothi Films (@SathyaJyothi) March 15, 2025

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Be the first person to comment

x