காதலர் தினத்துக்கு 11 படங்கள் ரிலீஸ்!

காதலர் தினத்துக்கு 11 படங்கள் ரிலீஸ்!

Published on

காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன.

காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும். ஆனால் இந்தமுறை ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘டிராகன்’ என வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட படங்கள் யாவுமே காதலர் தினத்தன்று வெளியாகவில்லை.

காதலர் தினத்தன்று ‘2கே லவ் ஸ்டோரி’, ‘பேபி & பேபி’, ‘பயர்’, ‘கண்ணீரா’, ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ‘வெட்டு’, ‘படவா’, ‘ அது வாங்கினால் இது இலவசம்’, ’தினசரி’ மற்றும் ’வருணன்’ என மொத்தம் 11 படங்கள் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே ‘விடாமுயற்சி’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய படங்கள் திரையரங்குகள் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த 11 படங்களில் ‘2கே லவ் ஸ்டோரி’ மற்றும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ ஆகிய படங்களை தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். அவற்றுக்கு குறிப்பிடத்தக்க திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மீதமுள்ள படங்கள் எல்லாம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகும் என்பது புரியாத புதிராக பிப்ரவரி 14-ம் தேதி வரை இருக்கும் என்பது மட்டும் உறுதி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in