Published : 28 Jul 2018 03:05 PM
Last Updated : 28 Jul 2018 03:05 PM
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுத்தால், அதில் நடிக்கத் தயார் என்று த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மோகினி’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் த்ரிஷா கலந்துகொண்டார். அப்போது ‘ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுத்தால் நடிப்பீர்களா’ என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த த்ரிஷா, ''சென்னையில் ஜெயலலிதா படித்த பள்ளியில் தான் நானும் படித்தேன். என்னுடைய 10-வது வயதில், என் பள்ளி விழாவுக்கு அவர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததிலிருந்தே, அவர் மீது பாசம், மரியாதை. அவர் கையால் வாங்கிய சினிமா விருது புகைப்படத்தைத் தான் இப்போதும் என் ட்விட்டரின் முகப்புப் படமாக வைத்திருக்கிறேன்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறைச் சினிமா படமாக எடுத்தால், அவரது கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனால், எனக்கு அரசியல் ஆர்வமெல்லாம் கிடையாது. நடிகையாகவே சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT