Published : 08 Jan 2025 07:58 AM
Last Updated : 08 Jan 2025 07:58 AM

இசைக் கலைஞர்களுக்கு விருதுகள்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

இந்திய பாரம்பரிய இசையில் சாதனை படைத்தவர்களைக் கவுரவிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ‘கேஎம் மியூசிக் கன்சர்வட்டரி’ நிறுவனத்துடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ' விருதுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த திங்கள்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு அரசியல் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய பாரம்பரிய இசை மற்றும் அதன் பயிற்சியாளர்களைக் கொண்டாடும் வகையில் விருதுகளை வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இளம் இசைக் கலைஞர்களுக்கு விருதுகள், கல்வியாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, பாரம்பரிய இசையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முன்னோடிகளுக்கான கவுரவம் என மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதற்கான வழிகாட்டி குழுவில், இசைக் கலைஞர்களான ஆஷா போஸ்லே, அம்ஜத் அலி கான், பாம்பே ஜெய, அஜய் சக்ரவர்த்தி ஆகியோரும் ஆலோசனைக் குழுவில் இலா பாலிவால், சாய் ஷ்ரவணம், பரத் பாலா, பாத்திமா ரபிக், கதிஜா ரஹ்மான், ஆடம், கிளின்ட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். விருது பெறுபவர்களுக்குப் பணப் பரிசு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒத்துழைப்புடன் சர்வதேச அளவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x