Published : 07 Jan 2025 03:20 PM
Last Updated : 07 Jan 2025 03:20 PM
விஷாலின் உடல்நிலை குறித்து அவரது திரையுலக நண்பர்கள் அனைவரும் அக்கறை காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற ‘மதகஜராஜா’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஷால். அப்போது அவருக்கு ஏற்பட்ட கை நடுக்கம், கண் பார்வை பிரச்சினை உள்ளிட்ட அனைத்துமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணையத்தில் Getwell Soon Vishal என்று பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினார்கள்.
நேற்று காலை முதலே, திரையுலகினர் பலரும் விஷாலுக்கு தொலைபேசி வாயிலாக நலம் விசாரிக்க தொடங்கினார்கள். என்ன பிரச்சினை, என்ன செய்வது என்று அவருடைய நண்பர்கள் பலரும் கலந்து ஆலோசித்து வருகிறார்கள். சில திரையுலகினர் நேரடியாக விஷாலை சந்தித்தும் என்ன பிரச்சினை என்று விசாரித்திருக்கிறார்கள்.
யாரெல்லாம் விஷாலை சந்தித்தார்கள் என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள். உடல்நிலையினை மொத்தமாக சரிசெய்துவிட்டு தான் இனி படம் நடிக்க முடியும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் விஷால். இதனால் விரைவில் அவரை பழைய நிலைக்கு கொண்டுவருவது என அவரது திரையுலக நண்பர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT