Published : 04 Jan 2025 12:55 PM
Last Updated : 04 Jan 2025 12:55 PM
தேசிங்கு பெரியசாமி படம் தொடர்பான வதந்திக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார் சிம்பு.
தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. ஆனால், அப்படத்தின் பொருட்செலவை மனதில் கொண்டு எந்தவொரு தயாரிப்பாளரும் முன்வரவில்லை. முதலில் இதனை தயாரிப்பதாக இருந்த ராஜ்கமல் நிறுவனமும், தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகிவிட்டது.
சில தினங்களுக்கு முன்பாக அஜித்திடம் தனது கதையை தேசிங்கு பெரியசாமி கூறியிருப்பதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அஜித் நடித்தால் தயாரிப்பாளரும் தயாராகிவிடுவார் என்பதால் இப்படம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.
இந்தச் சர்ச்சை தொடர்பாக சிம்பு - தேசிங்கு பெரியசாமி இருவருமே எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்கள். தற்போது இதற்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார்கள். சிம்புவுடன் கைகோர்த்து இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை தேசிங்கு பெரியசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள்ளார்.
அந்தப் புகைப்படத்தை சிம்பு மேற்கோளிட்டு, “எது மதிப்பு மிக்கதோ அதையே காலம் சோதிக்கிறது” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் சிம்பு - தேசிங்கு பெரியசாமி கூட்டணி தான் படம் பண்ணவிருப்பது உறுதியாகிவிட்டது. அஜித் - தேசிங்கு பெரியசாமி இணைவது வெறும் வதந்தியே என்பதும் தெரியவந்துள்ளது.
Time tests what's truly worth it. https://t.co/rHsZ6va8J0
— Silambarasan TR (@SilambarasanTR_) January 2, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT