Published : 04 Jan 2025 10:39 AM
Last Updated : 04 Jan 2025 10:39 AM

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

‘ராஜா ராணி’ படம் மூலம் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம், அரண்மனை 3 என பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

இவர் நவ்நீத் என்பவரைப் பல வருடங்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் (ஜன.2) திருமணம் செய்துகொண்டனர்.

இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவர் களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x