Published : 18 Dec 2024 09:47 AM
Last Updated : 18 Dec 2024 09:47 AM
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பித்துள்ளனர்.
இதுகுறித்து இதன் இயக்குநர் அன்பு கூறும்போது, ‘‘இந்தப் படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பிக்கிறோம். அவர் கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும். விஜயகாந்த் நடித்த ‘பொன்மனச் செல்வன்’ படத்தில் இடம் பெற்ற ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடலையும் இணைத்துள்ளோம்.
விஜயகாந்த்துக்கும் சண்முக பாண்டியனுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விஜய் நடித்த ‘த கோட்’ படத்திலும் ஏ.ஐ.தொழில்நுட்படம் மூலம் விஜயகாந்தை காண்பித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT