Published : 14 Dec 2024 01:49 AM
Last Updated : 14 Dec 2024 01:49 AM

‘எக்ஸ்ட்ரீம்’ பெண்களுக்கான படம்: இயக்குநர் தகவல்

‘பிழை’, ‘தூவல்’ படங்களை இயக்கிய ராஜவேல் கிருஷ்ணா இயக்கி​யுள்ள படம், ‘எக்ஸ்ட்ரீம்’. இதில் ரச்சிதா மஹாலட்​சுமி, அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்​டர், ராஜ்கு​மார், சிவம் உட்பட பலர் நடித்​துள்ளனர். சீகர் பிக்​சர்ஸ் சார்​பில் கமலகு​மாரி, ராஜ்கு​மார் தயாரித்​துள்ளனர்.

படம் பற்றி ராஜவேல் கிருஷ்ணா கூறும்​போது, “எக்ஸ்ட்​ரீம் என்றால் தீவிரம், அளவுக்கு அதிகம் என்று சொல்​லு​வோம். எல்லா​வற்றுக்​கும் ஒரு லிமிட் இருக்​கிறது. அதை மீறும்​போது நடக்​கும் விளைவு​தான் இந்தப் படத்​தின் கதை. பெண்​களுக்கான படம் இது. நான் இயக்கிய ‘தூவல்’ படம், பல்வேறு பட விழாக்​களில் 40 விருதுகளைப் பெற்​றது. இங்கு மக்கள் ஆதரவு இருந்​தும், திரையரங்​குகள் தராதது மிகுந்த வருத்​தமளித்​தது. இந்தப் படம் சிறந்த வரவேற்​பைப் பெறும் என்று நம்பு​கிறேன். வரும் 20ம் தேதி எக்ஸ்ட்ரீம் வெளி​யாகிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x