Published : 12 Dec 2024 09:33 AM
Last Updated : 12 Dec 2024 09:33 AM
ஆனந்த் நாக், ஜனனி, பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், சரத்ராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘அறிவான்’. எம்டி பிக்சர்ஸ் சார்பில் துரை மகாதேவன் தயாரிக்கும் இந்தப் படத்தை அருண் பிரசாத் இயக்கியுள்ளார். கார்த்திக் ராம் எரா இசையமைக்கிறார். யஷ்வந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குநர் அருண் பிரசாத் கூறும் போது, “ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டரால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். அங்கு அடுத்தடுத்து 4 கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அதற்கு காரணம் என்ன என்பதை அவர் கண்டுபிடிப்பது தான் கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன” என்றார். இதன் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT