Published : 05 Dec 2024 07:09 AM
Last Updated : 05 Dec 2024 07:09 AM
நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சண்முகா பிலிம்ஸ் கே. சுரேஷ் வரும் 13-ம் தேதி வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில், இயக்குநர் எஸ்.ஜே. அர்ஜுன் பேசும்போது, '' நான் 'முண்டாசுப்பட்டி' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பா. ரஞ்சித், நலன் குமரசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை பார்க்கும்போது எனக்குள் பயம் இருக்கும். அந்த பயம் தற்போது மீண்டும் வந்துவிட்டது. இவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கிறேன். சூது கவ்வும் 2 படத்தைச் சிறப்பாகவே செய்து இருக்கிறோம். இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமரசாமி பார்த்துவிட்டுத் திட்டாமல் இருந்தாலே வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்த கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்தி ரத்தை உணர்ந்து நடித்தனர். படத்தில் பணியாற்றிய அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT