Published : 02 Dec 2024 09:17 PM
Last Updated : 02 Dec 2024 09:17 PM

சில்க் ஸ்மிதா பிறந்த நாளில் வெளியான பயோபிக் அறிவிப்பு - கிளிம்ஸ் எப்படி?

சென்னை: மறைந்த நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

க்ளிம்ஸ் வீடியோ எப்படி? - தொடக்கத்தில் இந்திரா காந்தி போல ஒருவர் காட்டப்படுகிறார். அவர் அன்றைய செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்துகொண்டிருக்கும்போது எல்லா இடத்திலும் சில்க் ஸ்மிதாவின் புகைப்படங்களே நிரம்பியிருக்கின்றன. யார் இந்த சில்க்? என்று கேட்க, அடுத்து சில்க் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்திரிகா ரவி நடந்து வர சுற்றியிருக்கும் அனைவரும் மெய் மறந்து அவரை பார்க்கின்றனர்.

பின்னணியில் இளையராஜாவின் இசை ஒலிக்கிறது. அதற்காக வீடியோ தொடங்கும் முன்பே ‘நன்றி இளையராஜா’ என கிரேடிட் கொடுக்கப்பட்டுள்ளது. 3 நிமிடங்கள் ஓடும் வீடியோவின் இறுதியில் 17 வருடம், 450 படங்கள், 5 மொழிகள், ஒரு பெண் என குறிப்பிடப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ‘silk smitha queen of the south’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘செய்’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்த சந்திரிகா ரவி இதில் சில்க் ஆக நடித்துள்ளார். படத்தை எஸ்டிஆர்ஐ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் ஜெயராம் சங்கரன் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x