Published : 27 Nov 2024 09:13 AM
Last Updated : 27 Nov 2024 09:13 AM

‘சூது கவ்வும் 2’ திரைக்​கதைக்கு 3 வருடம்!

நலன் குமாரசாமி இயக்​கத்​தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்​தின் அடுத்த பாகம் ‘சூது கவ்வும் 2’ என்ற பெயரில் உருவாகி​யுள்​ளது.

மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் என பலர் நடித்​துள்ளனர். திருக்​குமரன் என்டர்​டெ​யின்​மென்ட் மற்றும் தங்கம் சினி​மாஸ் சார்​பில் சி.வி.கு​மார், எஸ்.தங்​க​ராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். எஸ்.ஜே.அர்​ஜுன் இயக்கி​யுள்​ளார்.

இந்தப் படம் பற்றி தயாரிப்​பாளர் சி.வி.கு​மார் பேசும்​போது, “சூது கவ்வும் முதல் பாகம் எடுக்​கும்​போதே, 2-ம் பாகத்​துக்கான ஐடியா இருந்​தது. அதன் இறுதிக்​கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்​டிருக்​கும்​போது இயக்​குநர் நலனிடம், ‘இந்தப் படம் மரபுக்கு மீறியதாக இருக்​கிறது; இது தொடர்பாக விமர்​சனங்கள் வருமே’ என்றேன். அவரும் நிச்​சயமாக என்றார். படம் வெளி​யானதும் மக்கள் கொண்​டாடி​னார்கள். இது தவறான முன்னு​தாரண படம் என்றும் விமர்​சனங்கள் வந்தன. அப்போது, ‘‘இதை 3 பாகமாக உருவாக்க இருக்​கிறோம். ‘சூது கவ்வும் 2’, 3-வது பாகமாக ‘சூது கவ்வும்-தர்மம் வெல்​லும்’ என்ற பெயரில் எடுக்க இருப்​ப​தாகச் சொன்னேன். அப்போது தான் இது நிறைவு பெறும்’’ என விளக்​க​மும் கொடுத்​தேன்.

நலன் குமரசாமி​யிடம் பேசும்​போது, ஒரு கட்டத்​தில் ‘சூது கவ்வும் 2’ கதையை எழுத முடிய​வில்லை என்றும் சில ஆண்டுகள் கழித்து இதை உருவாக்​கலாம் என்றும் சொன்​னார். அவர் பிசி​யான​தால் 2-ம் பாகத்​தின் கதை எப்படி இருக்க வேண்​டும் என்பதை சுருக்​க​மாகச் சொன்​னார். இதன் திரைக்​கதையை யாரால் எழுத முடி​யும் என்று நினைத்த​போது, அர்ஜுன் வந்தார். பிறகு ஒரு குழுவை உருவாக்கி எழுதினோம். முதல் பாகத்​தில் விஜய் சேதுபதி எப்படிப் பொருத்​தமாக இருந்​தாரோ, இதில் மிர்ச்சி சிவா பொருத்​தமாக இருப்​பார் என தீர்​மானித்து நடிக்க வைத்​தோம். இயக்குநர் அர்ஜுன் இதன் திரைக்​கதைக்காக 3 ஆண்டுகளை எடுத்​துக் கொண்​டார். என் நிறு​வனத்​திலிருந்து வெளி​யாகும் 21-வது படம் இது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x