Last Updated : 30 Oct, 2024 11:20 AM

 

Published : 30 Oct 2024 11:20 AM
Last Updated : 30 Oct 2024 11:20 AM

அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி நன்றி!

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை லோகோ வடிவமைப்பை உபயோகப்படுத்தியதற்காக நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காக படப்பிடிப்புக்கு இடையே பயிற்சி எடுத்து வருகிறார். இதில் தன்னுடைய கார், ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணங்களில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை லோகோ வடிவமைப்பை பயன்படுத்தி உள்ளார்.

இதற்காக அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “உலக அளவில் சிறப்புக்குரிய 24ஹெச் துபாய் 2025 மற்றும் தி யூரோப்பியன் 24ஹெச் சீரிஸ் சாம்பியன்ஷிப் - போர்ஷே 992 ஜிடி3 கப் கிளாஸ் கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை லோகோவை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழக விளையாட்டு மேப்பாட்டுத்துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - இரவு நேர சாலை பார்முலா 4 கார் பந்தயம் போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x