Published : 22 Oct 2024 06:48 AM
Last Updated : 22 Oct 2024 06:48 AM

கடற்கரை பகுதிகளில் பாண்டிராஜ், விஜய் சேதுபதி பட ஷூட்டிங்

பசங்க, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் உட்பட பல படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர்தற்போது இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு இப்போது திருச்செந்தூரில் நடந்து வருகிறது. விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாகின்றன. அடுத்து தூத்துக்குடி, ராமேஸ்வரம் உட்பட மேலும் சில கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இது சிறு நகரத்துக்குப் பின்னணியில் நடக்கும் கதை என்று கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x