Published : 07 Oct 2024 06:24 PM
Last Updated : 07 Oct 2024 06:24 PM

‘ப்ளடி பெக்கர்’ டீசர் எப்படி? - கவின் கெட்டப்பும், ஆட்டமும்!

சென்னை: கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - யாசகராக நடித்துள்ள கவினின் தோற்றம் கவனம் ஈர்க்கிறது. சிக்னலில் யாசகம் கேட்பவராக தரையில் அமர்ந்து ஆட்டோகாரரிடம் காசு கேட்கிறார் கவின். அவர் சவாரி இல்லை என்று சொல்ல “எனக்கு மட்டும் கால் இருந்திருந்தா உன்ன மாதிரி நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்” என அப்பாவி முகத்துடன் கூறி நகர்கிறார்.

அப்போது, இசை வாத்தியங்கள் முழங்க சாவு ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது. உடனே எழுந்து நின்று குத்தாட்டம் போட்டுவிட்டு நடந்து செல்கிறார் கவின். இதை பார்க்கும் ஆட்டோ ட்ரைவர் கோபமடைகிறார். இந்தப் படத்துக்கு மிகப் பெரிய அடையாளம் கவினின் கெட்டப். அதைத் தாண்டி படம் என்ன பேசுகிறது என்பதை ட்ரெய்லர் மூலம் தான் கணிக்க முடியும். வெறும் ஓர் அறிவிப்பாக இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளடி பெக்கர்: அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். கவின், மாருதி பிரகாஷ், கவின், ரெடின் கிங்ஸ்லி, சுனில் சுகதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x