‘உங்களால் அடைந்த நஷ்டம்...’ - பிரகாஷ் ராஜை சாடிய தயாரிப்பாளர்

‘உங்களால் அடைந்த நஷ்டம்...’ - பிரகாஷ் ராஜை சாடிய தயாரிப்பாளர்
Updated on
1 min read

சமீபத்தில் கூட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும், இவருக்கும் வார்த்தைப் போர் நடந்தது. நேற்று (அக்.5) மாலை திருச்சி சிவா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேசினார் பிரகாஷ் ராஜ்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழா பேச்சிலும், பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார் பிரகாஷ் ராஜ். இந்த விழா முடிந்தவுடன் மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘துணை முதல்வருடன்’ என்று பதிவொன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார் பிரகாஷ் ராஜ்.

அந்தப் பதிவை மேற்கோளிட்டு தயாரிப்பாளர் வினோத், “உங்களுடன் அமர்ந்திருக்கும் 3 பேரும் தேர்தலில் ஜெயித்தவர்கள். ஆனால் நீங்கள் டெபாசிட் இழந்தவர். அதுதான் வித்தியாசம். என்னுடைய படத்தின் படப்பிடிப்பில் உங்களால் 1 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. கேரவேனில் இருந்து சொல்லாமல் சென்றுவிட்டீர்கள். அதற்கு என்ன காரணம்? எனக்கு தொலைபேசியில் அழைப்பதாக சொன்னீர்கள்; ஆனால் அழைக்கவில்லை.

2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியாகி விட்டோம். அன்றைய தினம் 1000 துணை நடிகர்கள் வேறு. இவருக்கு 4 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. ஆனால், வேறொரு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தவுடன் சொல்லாமல் சென்றுவிட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

‘எனிமி’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்தவர் வினோத். இவர் தீவிரமான பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in