Published : 27 Jun 2018 07:22 PM
Last Updated : 27 Jun 2018 07:22 PM
‘சிம்புவுடன் தொடர்பில் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார் மஞ்சிமா மோகன்.
கேரளாவைச் சேர்ந்த மஞ்சிமா மோகன், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில், சிம்பு ஹீரோவாக நடித்தார். பெரும்பாலானவர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. குறிப்பாக, சிம்பு - மஞ்சிமா இடையேயான ரொமான்ஸும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் எல்லோரையும் வசீகரித்தன.
இந்நிலையில், ‘தேவராட்டம்’ படத்துக்காக சென்னை வந்திருந்த மஞ்சிமாவிடம், ‘தமிழில் உங்கள் முதல் ஹீரோவான சிம்புவுடன் இன்னும் ‘டச்’சில் இருக்கிறீர்களா?’ என்று கேட்டபோது,
“இல்லை. சிம்பு மட்டுமல்ல, நான் நடித்த எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை. நான் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதோ, போன் பண்ணி பேசுவதோ கிடையாது. பொது இடங்களில் சந்தித்துக் கொண்டால் ‘ஹாய்’ சொல்வேன், அவ்வளவுதான். படத்தில் நடிக்கிறவரை தான் அந்த நட்பு இருக்கும். படம் முடிந்துவிட்டால் அதைத் தொடர்வது கிடையாது.
சில நேரங்களில் சிலருடன் படம் முடிந்தும் நட்பு தொடரலாம். ஆனால், இதுவரை எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் யாரும் அமையவில்லை. அதனால் எனக்கு நெருக்கமான நண்பர்கள் என சினிமாவில் யாரும் கிடையாது” என்றார் மஞ்சிமா மோகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT