Published : 18 Sep 2024 07:52 PM
Last Updated : 18 Sep 2024 07:52 PM
சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் வெளியான 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.413 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி எனக் கூறப்படுகிறது.
இப்படம் முதல் நாள் ரூ.126.32 கோடியை வசூலித்தது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் வெளியான 13 நாட்களில் ரூ.413 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வெளியான விஜய்யின் ‘லியோ’ மொத்தமாக ரூ.600 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. ‘தி கோட்’ திரைப்படம் ரூ.500 கோடியை நெருங்கும் என தெரிகிறது.
#G.O.A.T Verithanamana Run at the BO #GreatestOfAllTime @actorvijay Sir @vp_offl @aishkalpathi @Ags_production pic.twitter.com/PBpJL8SNIi
— Archana Kalpathi (@archanakalpathi) September 18, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment