Published : 16 Sep 2024 12:16 PM
Last Updated : 16 Sep 2024 12:16 PM
சினிமா நட்சத்திரங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமணத்தை ஒட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ். அப்போது முதல் இருவரும் காதலித்து, ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். அனைத்து விழாக்களிலும் இருவரும் ஒன்றாகவே கலந்து கொண்டார்கள். தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்திலும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் இருவரும் வெளிப்படையாகக் காதலை அறிவிக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. ஆனால், திருமணம் குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது.
இதனிடையே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் இரண்டு குடும்பத்தினர் சூழ நடைபெற்று இருக்கிறது. இதன் புகைப்படங்களை இருவருமே கூட்டாக அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment