Published : 05 Sep 2024 03:39 PM
Last Updated : 05 Sep 2024 03:39 PM

நானியின் புதிய படம் ‘Hit: The 3rd Case’ - அறிமுக வீடியோ எப்படி? 

ஹைதராபாத்: நானி நடித்து வரும் புதிய படமான ‘Hit: The 3rd Case’ தெலுங்கு படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

அறிமுக வீடியோ எப்படி?: பனி மலைகளில் காரை ஓட்டிச் செல்கிறார் நானி. அவரை சிலர் துரத்தி வருகிறார்கள். அப்போது காவல்துறை அதிகாரியிடம், “நானி ஆபத்தில் இருக்கிறார்” என ஒருவர் சொல்ல, அதற்கு அந்த அதிகாரி, “நானியே ஆபத்தானவர்” என பில்டப் கொடுக்க சிகரெட் பிடித்துக்கொண்டே கார் ஓட்டும் மாஸ் காட்சிகளுடன் நானி திரையில் தோன்றுகிறார். அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘Hit: The 3rd Case’ - நானி நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘சூர்யா சாட்டர் டே’. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து நானி நடிக்கும் படம் ‘Hit: The 3rd Case’. இந்தப் படத்தை சைலேஷ் இயக்கியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ‘HIT: The First Case’ வெளியானது. அடுத்து 2022-ல் ‘HIT: The Second Case’ வெளியானது. தற்போது இந்த சீரிஸின் 3-ம் பாகத்தில் நானி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அறிமுக வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x