Published : 30 Aug 2024 06:22 PM
Last Updated : 30 Aug 2024 06:22 PM

லோகேஷ் - ரஜினியின் ‘கூலி’யில் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ப்ரீத்தி’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டர் எப்படி? - இதுவரை வெளியான சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா போஸ்டர்களில் அவர்கள் கையில் வாட்சை வைத்திருந்தனர். தற்போது வெளியாகியுள்ள ஸ்ருதிஹாசன் போஸ்டரில் அவர் கையில் ஆயுதம் ஒன்றை வைத்துள்ளார். ஒருவித அதிர்ச்சியுடன் கையிலிருக்கும் ஆயுதத்தை வெறித்து பார்க்கிறார். படத்தில் ஆக்‌ஷனுடன் களமிறங்குவார் என தெரிகிறது. இதுவரை வெளியான போஸ்டர்கள் அனைத்துமே அதிரடியான ஆக்‌ஷன் களத்தை உறுதி செய்யும் கதாபாத்திரங்களாகவே காணப்படுகின்றன.

கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x