Published : 29 Aug 2024 06:44 PM
Last Updated : 29 Aug 2024 06:44 PM

டிச.20-ல் ரிலீஸ் ஆகிறது வெற்றிமாறனின் ‘விடுதலை 2’

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் போஸ்டர் அதனை உறுதி செய்தது. மேலும் நீண்ட நாட்களாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x