Published : 27 Aug 2024 08:41 PM
Last Updated : 27 Aug 2024 08:41 PM

லோகேஷ் - ரஜினியின் ‘கூலி’ பட கதாபாத்திரங்கள் நாளை அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை அவரே அண்மையில் உறுதி செய்தார். அதேபோல ஆமீர்கான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ புகழ் சவுபின் ஷாயிர் இந்தப் படத்தில் கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியானது. ஸ்ருதிஹாசன், சத்யராஜ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இப்படியான பல தகவல்கள் பரவி வரும் நிலையில், புதன்கிழமை படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் நாளை (ஆக.28) வெளியாகும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x