Published : 12 Aug 2024 08:04 AM
Last Updated : 12 Aug 2024 08:04 AM
கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 430-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ராஷ்மிகா மந்தனா, மோகன்லால் , அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ராம் சரண், மம்மூட்டி, துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், பிரபாஸ் என பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment