Published : 03 Aug 2024 09:36 PM
Last Updated : 03 Aug 2024 09:36 PM

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்துடன் மோதும் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ - தீபாவளி ரிலீஸ்!

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சைரன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பிரதர்’. இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, ‘கேஜிஎஃப்’ புகழ் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில், ‘ஜெனி’,‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x