Published : 19 Jul 2024 03:58 PM
Last Updated : 19 Jul 2024 03:58 PM

தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ஜூலை 26-ல் ‘புதுப்பேட்டை’ ரீரிலீஸ்! 

சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வரும் 26-ம் தேதி தமிழ்நாட்டில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தனுஷின் ‘ராயன்’ படமும் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் என அழைக்கப்படும் இப்படத்தில் சோனியா அகர்வால், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் தனுஷ் கேங்கஸ்டர் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பலராலும் இப்படம் பாராட்டப்பட்டு வருகிறது. தனுஷின் பிறந்த நாள் ஜூலை 28-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏடிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளரும் பிரபல விநியோகஸ்தருமான மதுராஜ் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.அதேநாளில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x