Published : 17 Jul 2024 04:34 PM
Last Updated : 17 Jul 2024 04:34 PM

நடிகர் கார்த்தியின் ‘மெய்யழகன்’ செப்டம்பர் 27-ல் ரிலீஸ்! 

சென்னை: கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் 25-வது படமாக வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக, அவர் நலன் குமாரசாமியுடன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ பட புகழ் ப்ரேம்குமார் இயக்கும் படத்திலும் நடித்துள்ளார். கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் கார்த்தியின் பிறந்த நாளையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியாரே’ திரைப்படம் திரைக்கு வருகிறது. தற்போது கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x