Published : 17 Jun 2024 10:27 PM
Last Updated : 17 Jun 2024 10:27 PM
சென்னை: நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.32.6 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள ‘மகாராஜா’ படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் திரைக்கு வரும் முன்பே பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியில் பாராட்டப்பட்டது. தொடர்ந்து ரிலீஸுக்குப் பிறகும் நேர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வெளியான மூன்று நாட்களில் ’மகாராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.32.6 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் மூன்று நாளில் இப்படமே அதிக வசூலைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
#Maharaja shatters box office records by being the highest ever opening weekend collection for a Tamil film in 2024 #BlockbusterMaharaja#MakkalSelvan @VijaySethuOffl
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB… pic.twitter.com/FqX1nv80PW— Passion Studios (@PassionStudios_) June 17, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment