Published : 06 May 2024 01:43 PM
Last Updated : 06 May 2024 01:43 PM

சம்பளத்தை உயர்த்தினாரா கவின்?

சென்னை: நடிகர் கவின், லால், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஸ்டார்’. ரைஸ் ஈஸ்ட்என்டர்டெய்ன்மென்ட், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா பட நிறுவனங்கள் சார்பில் பி.வி.எஸ்.என். பிரசாத், நிதி சாகர் தயாரித்துள்ளனர். ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். வரும் 10-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படம் பற்றி கவின் கூறும்போது, “இதன் கதையை கேட்டு முடித்ததும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன். படைப்பும் பெரிது, உழைப்பும் நேரமும் அதிகம். இதன் கதை யதார்த்தமாக இருக்கும். சினிமாவை பற்றிய கதை. 'சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது' என பொதுவாகச் சொல்வார்கள். தயாரிப்பாளரும் கதையைக் கேட்டுவிட்டு, இதுபோன்ற கருத்தைச் சொல்லி விடுவாரோ என பயந்தேன். ஆனால் படத்தை தயாரிக்க அவர் ஒரே நாளில் ஒப்புக்கொண்டதும் நம்பிக்கை அதிகரித்து விட்டது. சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில்இந்தத் திரைப்படம் இடம்பெறும்” என்றார்.

அவரிடம் ஒவ்வொரு படம் முடிந்ததும் சம்பளத்தை உயர்த்திவிடுவதாக வரும் தகவல் பற்றி கேட்டபோது, “கேட்கிறோம் என்பதற்காக யாரும் சம்பளத்தை கொடுத்துவிட மாட்டார்கள். மார்க்கெட் தான் சம்பளத்தைத் தீர்மானிக்கிறது. இது எனது 4-வது படம். இதை முடிக்கவே ஒரு வருடம் ஆகியுள்ளது. என் சம்பளம் பற்றி வந்த தகவல்கள் எதுவும் உண்மையில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x