பிரச்சாரக் களத்தில் மன்சூர் அலிகானுக்கு உடல்நல பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

பிரச்சாரக் களத்தில் மன்சூர் அலிகானுக்கு உடல்நல பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

Published on

வேலூர்: வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த நடிகரும், சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வேலூர் தொகுதி முழுவதும் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு அளிக்க கோரி பிரச்சாரம் செய்துவந்தார். இந்நிலையில், இன்று குடியாத்தம் பகுதியில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in