Published : 25 Mar 2024 06:53 AM
Last Updated : 25 Mar 2024 06:53 AM
சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான ‘ரமணா’ படத்தின் லொகேஷனுக்கு, 23 வருடத்துக்குப் பிறகு இப்போது சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பை நடத்தும் அவர், இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், படப்பிடிப்புக்காக, 'ரமணா' லொகேஷனுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்திருக்கிறேன். தொடங்கிய இடத்துக்கு மீண்டும் வந்திருப்பது விசித்திர உணர்வைத் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் முருகதாஸ், இந்தப் படத்தை முடித்துவிட்டு, இந்தியில் சல்மான் கான் நடிக்கும் மிரட்டலான ஆக்ஷன் படத்தை இயக்க இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT