Published : 17 Feb 2018 12:40 PM
Last Updated : 17 Feb 2018 12:40 PM
'நாடக மேடை' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் விளக்கமளித்துள்ளார்.
'துருவங்கள் 16' படத்தைத் தொடர்ந்து 'நரகாசுரன்' படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். இதன் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
'நரகாசுரன்' படத்தைத் தொடர்ந்து 'நாடக மேடை' என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார் கார்த்திக் நரேன். இப்படத்தை தன்னுடைய சொந்த நிறுவனமான ‘நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ‘ பட நிறுவனம் சார்பில் இயக்குநர் கார்த்திக் நரேனே தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு – சுஜித் சரங், இசை – ரோன் ஈத்தன் யோகன், எடிட்டிங் – ஸ்ரீஜித் சரங், கலை – சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன் என்று தன் படக்குழுவையும் இறுதிச் செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
இப்படத்தின் கதைக்களம் குறித்து கார்த்திக் நரேன், "என் மனதுக்கு நெருக்கமான படம் ’ நாடக மேடை’. இது ஒரு நேர்மறையான படம். முதன்முறையாக நிஜ உலகத்தை பார்க்கும் இளைஞர்கள் பார்வையில் படம் இருக்கும். பதின்ம வயது முடிந்து 20களின் ஆரம்பத்தில் இருக்கிறேன். நான் எனது வாழ்க்கையில் பட்ட அனுபவங்களை திரைக்கதையில் சேர்த்திருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை பின்னணியில், நகரத்தில் நடக்கும் கதை. படத்தில் நாங்கள் கையாளும் விஷயம் அனைவருக்கும் பொதுவானதாக, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT