Last Updated : 15 Apr, 2014 11:42 AM

 

Published : 15 Apr 2014 11:42 AM
Last Updated : 15 Apr 2014 11:42 AM

விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன்

ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் 'யட்சன்' படத்தினை தற்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரித்து, இயக்கி வருகிறார்.

கடந்தாண்டு தீபாவளிக்கு அஜித் நடிப்பில் வெளியான 'ஆரம்பம்' படத்தினை இயக்கியவர் விஷ்ணுவர்தன். அப்படம் திரை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்து பல்வேறு வகையான செய்திகள் வெளியானபடி இருந்தன.

தற்போது விஷ்ணுவர்தன் தனது நண்பரான ஆர்யா, தன் சகோதரர் கிருஷ்ணா இருவரையும் வைத்து 'யட்சன்' என்ற படத்தினை இயக்கி வருகிறார். விஷ்ணுவர்தன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, யு.டிவி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

இந்த கதை, 'யட்சன்' என்ற கதையின் பெயரிலேயே, ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்தது. எழுத்தாளர்கள் சுபா இதனை எழுதினார்கள். 'யட்சன்' படத்திற்கு எழுத்தாளர்கள் சுபாவும் விஷ்ணுவர்தனும் இணைந்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். ’ஆரம்பம்’ படத்திலும் இந்த கூட்டணி இணைந்து பணியாற்றியது.

சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் கனவுடன் சென்னைக்கு வருவான் ஒரு நாயகன். ஸ்கெட்ச் போட்டு ஓர் ஆளைத் தூக்குவதற்காக சென்னைக்கு வருவான் இன்னொருவன். ஒருவன் அப்பாவி அழகன்; இன்னொருவன் கில்லாடி முரடன். திடீர் திருப்பத்தில் சந்தர்ப்பவசத்தால் இருவரும் இடம் மாற, அடியாள் ஹீரோ, சினிமா கேமரா முன் நடித்துக்கொண்டிருப்பான். நடிப்பு தாகத்தோடு வந்தவன் ரத்த வேட்கையுடன் கொலைத் தொழில் புரிந்துகொண்டிருப்பான்.

நிறைய திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கலந்த இக்கதையில் ஆர்யா, கிருஷ்ணா இருவரும் நடித்து வருவது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை உண்டாக்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x