Published : 17 Feb 2018 12:41 PM
Last Updated : 17 Feb 2018 12:41 PM
ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலுக்கு வருவது பணம் சம்பாதிக்க அல்ல என்று நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் படப்பிடிப்புக்கு இடையே முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்தில் நாடகக் கலைஞர்களை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் கார்த்தி பேசியதாவது:
நாங்கள் பொறுப்பில் இருந்தால் தான், நடிகர் சங்கக் கட்டட கட்டுமானப் பணி நிறைவுபெறும். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும்.
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் விஷாலுடைய எண்ணம். தேர்தலில் போட்டியிடும்போது சாமானியர்களுக்கு எத்தகைய இடையூறுகள் வருகிறது என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலுக்கு ஏற்பட்ட சம்பவம் மூலம் தெரிந்து கொண்டோம்.
ரஜினி சார், கமல் சார் போன்றோர் அரசியலுக்கு வருவது மக்களுக்கு சேவையாற்றத்தானே தவிர, பணம் சம்பாதிக்க அல்ல. அவர்களின் அரசியல் கொள்கைகளை தெரிந்து கொண்ட பிறகே நாங்கள் ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு கார்த்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT