Published : 26 Jan 2024 04:23 AM
Last Updated : 26 Jan 2024 04:23 AM
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரிணி காலமானார். அவரது உடல் ஈன்ற வெள்ளிக்கிழமை இந்தியா கொண்டுவரப்படுகிறது. இலங்கையில் உள்ள இளையராஜா மகளின் உடலை பார்த்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“சகோதரி, இசைக்கலைஞர் பவதாரணி அவர்களின் இறப்பு செய்தி, பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என பா.ரஞ்சித் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
சகோதரி இசைக்கலைஞர் பவதாரணி அவர்களின் இறப்பு செய்தி, பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் !!! pic.twitter.com/UX3Ss9fAr5
— pa.ranjith (@beemji) January 25, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT