Published : 20 Feb 2018 01:54 PM
Last Updated : 20 Feb 2018 01:54 PM
மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பானி சரத் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அருண் விஜய், அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அப்பானி சரத் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அங்காமலே டைரீஸ்' படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT