Published : 31 Dec 2023 06:46 PM
Last Updated : 31 Dec 2023 06:46 PM
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘விஜய் 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு "The Greatest of All Time" என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பு பற்றிய இந்தப் பாடலில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றிருந்தனர்.
ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் ஓபனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், விஜய் நடித்து வரும் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. "The Greatest of All Time" என்று இந்தப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், வயதான தோற்றம், இளமையான தோற்றம் என இரண்டு வேடங்களில் விஜய் இருக்கிறார். அதே போல போஸ்டரில் ஒரு விமானம் மற்றும் பாராசூட்டும் இடம்பெற்றுள்ளன. மேலும், இரண்டு விஜய்யும் விமானிகள் உடையில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், Light ca devour the darkness but darkness cannot consume the light, அதாவது, இருளால் ஒளியை விழுங்க முடியாது என பொருள்தரும் ஒரு வாசகமும் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜய் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருப்பது, அவரது ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைந்திருக்கிறது.
#Thalapathy with #IlayaThalapathy is #TheGreatestOfAllTime#Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @malinavin @thisisysr… pic.twitter.com/mn7MqP3BN0
— AGS Entertainment (@Ags_production) December 31, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT