Last Updated : 08 Jan, 2018 05:37 PM

 

Published : 08 Jan 2018 05:37 PM
Last Updated : 08 Jan 2018 05:37 PM

இணையம் இல்லாத ஊர்களில் நேரடி உறுப்பினர்கள் சேர்க்கை: களமிறங்கும் RBSI ஃபேஸ்புக் பக்கம்

இணையதளம் இல்லாத ஊர்களில் நேரடியாக சென்று ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களைச் சேர்க்க RBSI ஃபேஸ்புக் பக்கம் களமிறங்கியிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 'ரஜினி மக்கள் மன்றம்' சார்பில் 'https://www.rajinimandram.org/' என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். இதில் மொபைல் செயலி மற்றும் இணையதளம் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இணையதளம் இல்லாத ஊர்களில் உள்ள மக்களை எப்படி மன்றத்தில் சேர்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக RBSI (Rajini Biggest Superstar Of India) ஃபேஸ்புக் பக்கம் களமிறங்கியுள்ளது.

இணையதள (Wifi) வசதி கொண்டு ஒரு வாகனத்தில், எல்.ஈ.டி டிவி, மடிக் கணிணிகள், பவர் சார்ஜர்கள், ஐபேடுகள், ஆண்டிராய்ட் போன்கள் ன்ற டிஜிட்டல் சாதனங்களுடன், சென்னையிலிருந்து 'RBSI டிஜிட்டல் வேன்' பயணத்தை தொடங்கினார்கள். முதலாவதாக கரூரில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. கரூர் மாவட்டத்தின் ரஜினி ரசிகர் மாவட்டத் தலைவர் கே.எஸ் ராஜா RBSI டிஜிட்டல் வாகனத்தை வரவேற்றார்.

மடிக்கணினிகளில் 'ரஜினி மக்கள் மன்றம்’ இணையதளத்தில் மக்களின் தகவல்களும், வாக்காளர் அடையாள எண்ணும் பதிவேற்றம் செய்யப்பட்டு இணைப்பு தொடங்கியது. பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று தங்களை ரஜினி மக்கள் மன்றத்தில் இணைத்துக் கொண்டார்கள். தங்களை பதிவு செய்து கொள்ள வரும் மக்களுக்கு ரஜினி பேசிய வீடியோவும் திரையிடப்படுகிறது. காலை 10 மணியளவில் தொடங்கிய பதிவு, மாலை ஏழு மணியளவில் குளித்தலையில் நிறைவுபெற்றது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 10,500 பேர் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x