Published : 01 Jan 2018 05:03 PM
Last Updated : 01 Jan 2018 05:03 PM
தனுஷ் நடிக்கவுள்ள 'மாரி 2' படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், படக்குழுவினர் குறித்த விவரமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் 'மாரி'. தற்போது அதன் 2-ம் பாகத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
'மாரி 2' பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், 'மாரி 2' தொழில்நுட்ப குழுவினரையும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக பிரசன்னா ஜி.கே, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சியாளராக சில்வா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.
இம்மாதமே படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 'மாரி 2' பணிகளை முடித்துவிட்டு, ஆகஸ்ட் மாதம் முதல் தானே இயக்கி, நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT