Last Updated : 20 Jan, 2018 09:16 AM

 

Published : 20 Jan 2018 09:16 AM
Last Updated : 20 Jan 2018 09:16 AM

சன் மியூசிக்கில் இருந்து விடைபெறுகிறேன்: அஞ்சனா

சன் மியூசிக்கிலிருந்து விடைபெறுவதாக அஞ்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வட்டமடித்து வந்த அஞ்சனா, தற்போது அந்தச் சேனலில் இருந்து விடைபெறுவ தாக அறிவித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப் பதாவது,

‘‘சொந்தக் காரணங்களுக்காக சன் மியூசிக்கில் இருந்து விடைபெறுகிறேன். தொகுப்பாளினியாக கடந்த 10 ஆண்டு காலப் பயணத்தில் மகிழ்ச்சி, அன்பு, சண்டை, ஏற்றம், இறக்கம் என ஒவ்வொன்றிலும் ஏராளமான அனுபவங்களை கற்றுக்கொண்டேன். என் மீது அளவு கடந்த அன்புகொண்ட எல்லோருக்கும் கடன்பட்டிருக்கிறேன்’’ எனத் தெரிவித்திருக்கிறார். ‘‘ஏன் இந்த திடீர் பிரேக்?’’ என்று அவரிடம் கேட்டபோது, ‘‘தினசரி வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டது தான் இம்முடிவு. மற்றபடி அவ்வபோது நடக்கும் இசை வெளியீட்டு விழா மற்றும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் முகம் காட்டுவேன். இன்னும் சில மாதங்களுக்குப் பிறகுதான் இந்த பிரேக் எடுத்ததுக்கு என்ன காரணம் என்று கூற முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x