Published : 17 Nov 2023 12:03 PM
Last Updated : 17 Nov 2023 12:03 PM
சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.
அதன்படி, தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவருக்கு ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கினர். அதே போல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர்100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர்… pic.twitter.com/hDlJmf7xBm— Ramesh Bala (@rameshlaus) November 17, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...