Last Updated : 15 Jan, 2018 10:51 AM

 

Published : 15 Jan 2018 10:51 AM
Last Updated : 15 Jan 2018 10:51 AM

அவசியம் கருதியே சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்: விஜய்

அவசியம் கருதியே 'மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன் என்று விகடன் விருது வழங்கும் விழாவில் விஜய் பேசினார்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெர்சல்'. இப்படம் வெளியானபோது, அதில் இடம்பெற்றிருந்த டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் குறித்து பெரும் சர்ச்சை உருவானது. இப்படத்தின் வசனங்களுக்கு பாஜகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பல்வேறு கட்சியினர் 'மெர்சல்' படக்குழு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜனவரி 13-ம் தேதி விகடன் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் 'மெர்சல்' படத்திற்காக சிறந்த நடிகர் விருதை விஜய்க்கு கமல்ஹாசன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து விஜய் பேசியதாவது:

சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றதால் 'மெர்சல்' திரைப்படம் பிரச்சினைகளைச் சந்தித்தது. அப்போது ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அதன் அவசியம் கருதியே 'மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன். அப்படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.

மேடையிலிருந்து கீழே இறங்கும் போது விஜய்யிடம் புகைப்படம் எடுக்க ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களைத் தாண்டி முன்வந்தார். அப்போது பலரும் அவரைத் தடுத்தனர். அந்த ரசிகரை விடுவித்து, அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x