Published : 02 Nov 2023 05:38 AM
Last Updated : 02 Nov 2023 05:38 AM

‘ரோஹிணி’யாக மாறிய வங்க மொழி நாவல்

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில், பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கமால் கோஷ். பிரபல வங்க இயக்குநர் தேவகி போஸின் மருமகன்.

அந்தக் காலக்கட்டங்களில் இயக்­கு­நர்­களும்தயா­ரிப்­பா­ளர்­க­ளும் மும்பை, புனே, கொல்கத்தா நக­ரங்­க­ளுக்­குச் சென்று, அங்­குள்ள ஸ்டூடி­யோக்க­ளில் பட­ வேலைகளை­ முடிப்பது வழக்கம். அப்போது கொல்கத்தா நியூ தியேட்­டர்­ஸில் இருந்து ‘தமிழ் சினி­மா­வின் தந்தை’யென கூறப்படும் கே.சுப்­ர­ம­ணி­யம் அழைத்து வந்தவர்தான், இவர். உதவி ஒளிப்பதிவாளராக சில படங்களில் பணியாற்றிய கமால் கோஷ், 1938-ல் வெளியான‘அனாதைப் பெண்’ மூலம் ஒளிப்பதிவாளராகஅறிமுகமானார். எஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட படைப்பான ‘சந்திரலேகா’வுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்தான்.

இவர் தமிழில் சில திரைப்படங்களை இயக்கியும்இருக்கிறார். அதில் ஒன்று, ‘ரோஹிணி’. வங்கஎழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘கிருஷ்ணகாந்தின் உயில்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவானது இந்தப் படம்.

இதில், எஸ்.வி.ரங்காராவ், மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன், எஸ்.வி.சகஸ்ரநாமம், ராஜ சுலோச்சனா, ஜி.வரலட்சுமி, சி.கே.சரஸ்வதி உட்பட பலர் நடித்தனர் . மெட்ராஸ் ஆர்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை மாதுரி தேவியும் அவர் கணவர் எஸ்.முகர்ஜியும் தயாரித்தனர், இந்தப் படத்தை. இந்த எஸ்.முகர்ஜி, ஒளிப்பதிவாளர். மாதுரி தேவி, அப்போதையை கனவு கன்னி. கிளாரா என்ற இயற்பெயரைக் கொண்ட அவருடைய வசீகர கண்கள் அப்போது பேசப்பட்டன.

படத்தின் திரைக்கதையை எஸ்.டி.சுந்தரம் எழுதினார். கே.வி.மகாதேவன் மற்றும் டி.சி.தத்ஆகியோருடன் ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்துக்கு பி.எல்.ராய், ஹெச்.எஸ்.வேணுஒளிப்பதிவு செய்திருந்தனர். பாடல்களை மருதகாசி எழுதியிருந்தார்.

சிறந்த கதை, இயக்கம், அருமையான ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்தும் இருந்தும் படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை.

1953ம் ஆண்டில் இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x