Published : 30 Oct 2023 07:03 AM
Last Updated : 30 Oct 2023 07:03 AM

ஜப்பான் டிரெய்லர் வெளியீட்டில் ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் அறிவிப்பு

நடிகர் கார்த்தி, 'பருத்தி வீரன்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ராஜு முருகன் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜப்பான்' அவருக்கு 25-வது படம்.இதில் அனு இம்மானுவேல், சுனில், வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்குரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீடு மற்றும் 'கார்த்தி 25' விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இதில் 'ஜப்பான்' படக்குழு, கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும்போது, “நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம், நான் சரியான பாதையில் செல்கிறேன் என்கிற பலமான தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. முதல் அன்பு எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. பிறகு நண்பர்கள், மனைவியிடம் இருந்து கிடைக்கிறது. அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்த நிபந்தனையும் இல்லாதது. அதை, நான் முதல் படத்திலேயே பெற்றுவிட்டேன். அவர்கள் அன்புதான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. நடிப்பு பற்றி ஒன்றும் தெரியாத எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் இயக்குநர் அமீர். இந்த நிகழ்வில் தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்" என்றார்.

மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்துகொண்டாட வேண்டும் என்பதற்காக 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் நிதி உதவியும் தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ரூ1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூ. 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருப்பதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.

நடிகர் சூர்யா பேசும்போது, “ஒவ்வொருவருக்கும் அழகான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை என்றுரஜினி சார் சொல்லுவார். அந்த வகையில் கார்த்திதனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திஇருக்கிறார். நான் சினிமாவில் நுழைவதற்கு முன்புஎனக்கு வேறு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கார்த்தி தன் பாதையைத் தேர்வு செய்வதில் கவனமாகஇருந்தார். நான் கார்த்தியைப் பார்த்து பொறாமையும் வியப்பும் கொண்டிருப்பேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x