Published : 25 Oct 2023 05:01 AM
Last Updated : 25 Oct 2023 05:01 AM
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அறிமுகமாகிறார். இவர், நடிக்கும் படத்துக்கு ‘அரிசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தை மோனிகா புரொடக்ஷன் சார்பில் பி.சண்முகம் தயாரிக்கிறார். இரா.முத்தரசன் மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை இயக்கும் எஸ்.ஏ.விஜய்குமார் கூறும்போது, “முத்தரசனிடம் இதில் நடிக்கக் கேட்டபோது முதலில் அவர் மறுத்துவிட்டார். தனக்கு அரசியல் பணிகள் அதிகம் இருக்கின்றன என்று கூறிவிட்டார். இருந்தாலும் இந்தக் கதையில் நடித்து இதன் கருத்தை நீங்கள் சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று சொன்னோம். பிறகு கதையைக் கேட்டார். விவசாயப் பின்னணி கதை. முதலில் தயக்கத்துடன் படப்பிடிப்புக்கு வந்தார். பிறகு சகஜமாகிவிட்டார். மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல. மனித வாழ்வின் உயிர் நாடி என்பதை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதுதான் கதை. விவசாயியாக நடித்திருக்கும் இரா. முத்தரசன் பேசும் வசனங்கள் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT