Published : 19 Oct 2023 04:50 AM
Last Updated : 19 Oct 2023 04:50 AM
விஜய்யின் ‘லியோ’ இன்று வெளியாகிறது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என்று படத்தில் நிறைய நட்சத்திரப் பட்டாளம். படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் படம் பற்றி பேசினோம்.
‘லியோ’ கதை பற்றி நிறைய தகவல் வந்திருக்கு...‘ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ்’ படத்தோட ரீமேக்தானா?
சினிமா கண்டுபிடிச்ச காலத்துல இருந்தே சொல்லப்படற பழைய கதைதான். நான் அதைஆக்ஷனா, ரசிகர்களுக்கு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கணுங்கறதுக்காக மாத்தி சொல்றேன். அதுதான் ‘லியோ’. முதல் காட்சி முடிஞ்சதுமே கதை என்னன்னு தெரிஞ்சிரும். எதுவுமே தெரியாம வந்து பார்க்கிற ரசிகர்களோட உற்சாகத்தைக் கொல்ல வேண்டாம்னுதான் கதையை சொல்லாம இருக்கிறேன். இந்தப் படத்துக்காக, விஜய் பண்ணின ஹோம் ஓர்க் அதிகம். முதல் ஷாட்ல இருந்து கடைசி வரைக்கும் அவர் படத்தைத் தாங்கியிருக்கார். என் படங்கள்ல எப்போதும் எமோஷன் இருக்கும். இதுவும் அப்படியான எமோஷன் ஆக்ஷன் படம்தான்.
கதை காஷ்மீர்ல நடக்குது. அதைத் தேர்வு பண்ண ஏதாவது காரணம் இருக்கா?
ஆமா. முதல்ல மூணாறு பின்னணியிலதான் இந்தக் கதையை எழுதினேன். இந்தக் கதைக்கு 'லைவ்லொகேஷன்' நிறைய தேவைப்பட்டது. விஜய்யை வச்சு அங்க படப்பிடிப்பை நடத்த வாய்ப்பே இல்லை.அதே மாதிரி செட் போட்டா, அந்த ஃபீல் சரியாவருமான்னும் தெரியாது. அதனால எந்த தொந்தரவும் இல்லாத ஒரு ஏரியா வேணுங்கறதால காஷ்மீரைத் தேர்வு பண்ணினோம். அங்க இருந்த மக்கள் அவ்வளவு சப்போர்ட் பண்ணினாங்க. அதனாலதான் 60 நாள் அங்க ஷூட் பண்ண முடிஞ்சுது.
டிரெய்லர்ல இடம் பெற்ற அந்தச் சர்ச்சை வார்த்தையை தவிர்த்திருக்கலாம்னு பிரச்சினை வந்ததே?
இதுக்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லிட்டேன். அந்த கேரக்டருக்கு அந்த எமோஷனுக் காக அது தேவைப்பட்டதால அப்படி வச்சேன். நிறைய பேர் அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அந்த வசனத்தை வச்சதுக்கு நான்தான் பொறுப்பு. படத்துல அந்த வார்த்தை வராது. அந்தஷாட்ல, நடிகர் விஜய் இதுவரை பண்ணாத ஒரு ரியாக்ஷன் இருக்கும். அது புதுசு.
பட ரிலீஸ்ல நிறைய பிரச்சினைகள் வந்திருக்கே?
சில விஷயங்கள் என் கன்ட்ரோல்ல இருக்குமில்லையா, அதைப் பற்றி நான் எப்போதும் கவலைப்படலாம். கவனமா இருக்கலாம். அதாவது கதைஎழுதறதுல ஆரம்பிச்சு பர்ஸ்ட் காப்பி கொடுக்கிறவரை என் கன்ட்ரோல்ல இருக்கு. புரமோஷன், ரிலீஸ் பிளான், பிசினஸ் பற்றி எனக்குத் தெரியாது. அது தயாரிப்பு நிறுவனம் சார்ந்தது. இதுல நான் ‘இன்வால்வ்’ ஆக முடியாது. ஏன்னா, எனக்கு வியாபாரம் தெரியாது. அந்த விஷயங்களைத் தயாரிப்பு தரப்புப் பார்த்துப்பாங்க. பொதுவா எல்லா பெரிய படத்துக்குமே கடைசி நேர டென்ஷன் இருக்கும். அதை அவங்க சரி பண்ணிடுவாங்க.
இதுல நிறைய நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க. எப்படி எல்லோரையும் மேனேஜ் பண்ணுனீங்க?
என் முதல் படத்துல இருந்தே 'ஸ்டார் காஸ்ட்' அதிகமாதான் இருக்கும். அப்படித்தான் இதுலயும். அப்படியே பழகிடுச்சு. ஒவ்வொருத்தர்கிட்டயும் நெருங்கி பழகும்போதுதான் தெரியுது, எவ்வளவு எளிமையா இருக்காங்கன்னு. சஞ்சய் தத் சார் முதல் நாள்லயே, என்னை அப்பான்னு கூப்பிடச் சொன்னார். அதே போல எல்லோருமே சுதந்திரம் கொடுத்ததால எனக்கு ரொம்ப ஈசியா இருந்தது. நான் எப்பவும் கோ டைரக்டர் வச்சிக்கிறதில்லை. நானே எல்லா நடிகர், நடிகைகள்கிட்டயும் பேசிடறதால ரொம்ப ஈசியா இருந்தது.
இதுக்கு முன்னால நிறைய சின்னப் படங்களுக்கான ஐடியா வச்சிருக்கேன்னு சொல்லியிருந்தீங்க...இப்ப, அதை வேற இயக்குநர்கள்கிட்ட கொடுத்திருவேன்னு சொல்லியிருக்கீங்களே?
ஆமா. இப்ப எனக்கான ‘கமிட்மென்ட்’ அதிகமாக இருக்கு. ரஜினி சார் கூப்பிட்டு ஒரு படம் பண்ணலாம்னு சொல்லும்போது, ஒரு சின்ன படம் பண்ணிட்டு வர்றேன்னு சொல்ல முடியாது. கார்த்தி சார்கிட்ட இரண்டு படம் பண்ணிட்டு வர்றேன்னு போனேன். இப்ப ஏழாவது படமாகத்தான் அவர் நடிக்கும் படத்தை பண்ணப் போறேன். அடுத்த படத்துக்கு ஒரு வருஷமாயிரும். அதுக்கு அடுத்த படத்துக்கு இன்னொரு வருஷம் ஆயிரும். இதெல்லாம் முடிச்சுட்டு நான் சின்ன படம் பண்றதுக்குப் பதிலா என் அசோசியேட்டோ, நண்பர்களோ பண்ணினா நல்லாயிருக்குமேன்னு அவங்ககிட்ட கொடுக்கிறேன்.
அடுத்து?
ரஜினி சார் படம் பண்றேன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறாங்க. அடுத்த வருஷம் ஏப்ரல்ல ஷூட்டிங் போறோம். அதை முடிச்சுட்டு 'கைதி 2' பண்றேன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT