Published : 03 Jul 2014 09:24 AM
Last Updated : 03 Jul 2014 09:24 AM
புதிய இயக்குநர்கள், இசையமைப் பாளர்கள், நடிகர்களை உருவாக்கு வது தயாரிப்பாளர்களின் கடமை என்று இயக்குநர் கே.பாலசந்தர் பேசினார்.
பரத் - நந்திதா நடிப்பில் தயா ராகும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத் தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை யில் புதன்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இயக்குநர் கே.பாலசந்தர் பேசிய தாவது:-
நான் இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்களை பார்த்தேன். இந்தகால ரசனைக்கேற்ப படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சினிமாத்துறைக்கு தயாரிப் பாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்கும் பணிக ளோடு நின்றுவிடக்கூடாது. நிறைய இளம் நடிகர் நடிகை களையும், இசையமைப் பாளர்கள், இயக்குநர்கள் போன்ற வர்களையும் உருவாக்க வேண் டும். சினிமாத்துறைக்கு அவர் களின் உதவி அவசியம். இது அவர் களின் கடமையும்கூட. என்னால் முடிந்தவரை நான் அதைச் செய்திருக்கிறேன்.
உதாரணத்துக்கு தயாரிப் பாளர் ஆர்.பி.சவுத்ரி 86 படங் களை தயாரித்திருக்கிறார். அந்த படைப்புகளின் வழியாக பல இயக்குநர்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார். இது ஆச்சர் யமாக உள்ளது. அந்த வகையில் நானும் என்னால் முடிந்தவரை தயாரிப்பு பணிகளை செய்திருக் கிறேன். எல்லா தயாரிப்பாளர் களும் இதை செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு கே.பாலசந்தர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT